jump to navigation

நாட்டு நடப்பு: சாந்திக்குப் பரிசு + கோவையில் கலாம் | Current affairs December 19, 2006

Posted by Chella in : சமூகம் , add a comment


powered by ODEO

இதோ நான் இணையநாடோடி வலைப்பூவில் இன்றுஎழுதிய கட்டுரை…

இன்றைய ஓசையில் நான் பேசியது இரண்டு விசயங்கள் பற்றி. அதில் ஒன்று கலைஞரின் மனிதாபிமானப் பரிசான ரூ 15 லட்சம், நம் சகோதரி சாந்திக்கு. நான் மிக்க மகிழ்ச்சியடந்த தருணங்களில் ஒன்று. சபாஷ் கலைஞரே!

முதலில் இது பற்றி ஓரிரு சிந்தனைகள். முதலில்எனது கண்டனம். பெண்தன்மை குறைவுஎன்பது ஹார்மோன் மற்றும் உடல் சம்பத்தப் பட்ட விசயம். ஒலிம்பிக் சம்மேளனமே கூட இரண்டு ஆண்டு கால சிகிச்சைக்குப் பின் அவர்கள் மீண்டும் பங்கேற்களாம்என்ற அளவில் அனுமதிக்கப்படும் ஒரு சாதாரண விசயம் இது. ஒரு பெண்ணானவள் அதிக போஷாக்கின்றி கடினமான உடல் உழைப்பிற்க்கு உற்படுத்தப் படும்போது அவளது வளர் சிதை மாற்றங்கள் பற்றிய பிரச்சைனை இது. போதைபோல அல்லாமல் இது இயற்கையின் விளையாட்டு. அதனாலேயே அவர்கள் மீண்டும் விளையாட குறுகிய காலமான இரண்டு ஆண்டு சிகிச்சை விடுப்பு! இந்த விசயத்தில் நமது ஹிந்து நாளேடு ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல இந்த விசயத்தை துப்பறிந்தது கேவலத்திலும் கேவலம். இன்னொரு உயர்குல ஆங்கிலப் ( “விரைவுப்” ) பத்திரிக்கை ஹோம் பேஜில் சாந்திக்கு பண உதவி அளித்தது சரியா தவறா என்று ஓட்டெடுப்பு நடத்திக்கொண்டு இருக்கிறது ( இடது-கீழ் ஓரம் பார்க்கவும் இந்த ஈனப் பிரவிகளின் புத்தியை ) . சாணக்கியன் கலைஞர் இதற்கெல்லாம் மசிபவரா என்ன!? மனிதாபாமான உதவிஎன்று அறிவித்து அந்தஎழைப் பெண்ணுக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு இதற்காகவே ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கலாம்!! அனேகமாக ஒருவேளை ஒரு பாப்பாத்தி வீரங்கனை இதே மாதிரி சிக்கியிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்களோ என்னமோ!


அதே போல சில வலைப்பூசீவிகள் (உம்: மரபூரார்) வலைத்தளத்தில் எழுதுவதே பெரிய விசயமாகத் தாங்களே முடிவு செய்து கொண்டு சாந்தி ஒரு திருநங்கையாகக் கூட இருக்கலாம் என்றெல்லாம்எழுதி வெந்த புண்ணில் வேள் பாய்ச்ச வேண்டாம் என்று கோபத்துடன் கேட்டுகொள்கிறேன். கீழே உள்ளதை இவர்கள் மீண்டும் நன்றாகப் படிக்கவும். இதே சாந்தி அவர்கள் இதே பாலின சோதனையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவில் தேறியிருக்கிறார். ( source: http://news.bbc.co.uk/ )
KP Mohan, a sports journalist, said athletes were usually examined by a team of doctors, including a gynaecologist, endocrinologist and psychologist, and put through physical and clinical examinations during a gender test.

The test was carried out soon after Soundararajan came second in the women’s 800m race on 9 December.

Reports say the athlete ( Shanthi) cleared the gender test at the Asian track and field championship in South Korea last year where she won the silver medal in the 800m.